--- --:--:-- --

ரஜினி மக்கள் மன்ற இணையதளத்தில் உறுப்பினராக இணையலாம்..!

1

ஜினி மக்கள் மன்றத்தில் இணைய விரும்புபவர்கள் வழக்கம் போலவே மன்றத்தின் இணையதளத்திலும், மொபைல் ஆப் வாயிலாகவும் இணைந்து கொள்ளலாம் என்று அந்த மன்றத்தின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

 

ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்புக்கு பிறகு www.rajinimakkalmandram.org என்ற இணையதளம் மற்றும் ரஜினி மக்கள் மன்றம் என்ற மொபைல் ஆப் ஆகியவை உருவாக்கப்பட்டன. அதில் மாற்றத்தை விரும்பும் மக்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளலாம் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

 

மேலும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அட்டையில் உள்ள பெயரும், ரஜினி மக்கள் மன்றத்தின் பதிவு செய்தவர் பெயரும் ஒன்றாக இருந்தால் அவர்கள் தங்களின் உறுப்பினர் அட்டையை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

 

இந்த முறை கடந்த பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் மட்டும் செயல்படாமல் இருந்தது. அதன் பின் இணையதளம், மொபைல் ஆப் ஆகியவை வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. அதில் அவர்கள் இணைந்து கொள்ளலாம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon