தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 3086 பேருக்கு தொற்று பாதிப்பு… உயிரிழந்தோர் 39 பேர்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் மடமடவென கீழ்நோக்கி சரிந்து வருகிறது. இன்று பாதிப்பு மேலும் குறைந்து 3086 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழப்பும் 39 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் சடாரென குறையத் தொடங்கியுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேலாகவே பதிவாகி வந்த தினசரி பாதிப்பு கடந்த வாரம் அதற்கு கீழாக பதிவான நிலையில், கடந்த 5 நாட்களாக 4 ஆயிரத்திற்கு கீழாக பதிவாகி வருகிறது. இன்றைய நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று 3086 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 6, 97,116 ஆக உயர்ந்துள்ளது. இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4301 பேர் ஆவர். இன்னும் சிகிச்சையில் இருப்பவர்கள் மொத்தமே 35,480 பேர் மட்டுமே ஆவர்.இன்று உயிரிழப்பும் வெகுவாக குறைந்து 39 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 10780 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையிலும் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறையத் தொடங்கியுள்ளது. இன்று சென்னையில் பாதிப்பு 845 ஆகும். கோவையில் 314, செங்கல்பட்டு 159, சேலம் 198, திருவள்ளுர் 180, திருப்பூர் 120, ஈரோடு 108, காஞ்சிபுரம் 106 என இந்த மாவட்டங்களில் மட்டும் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.






