நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ள பிராவோ..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் பிராவோ காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். டெல்லி அணியுடனான போட்டியின் போது டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படும் பிராவோ காயமடைந்தார்.
மேலும் அவர் காயத்தால் அவதிப்பட்டதால் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்படவில்லை. இந்நிலையில் காயம் காரணமாக சென்னை திரும்புவதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.






