--- --:--:-- --

அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஏழு மாடி கட்டுப்பாட்டு அறை..!

10

சென்னையில் காவல்துறையினை நவீன மயமாக்கல் திட்டத்தின்படி முழுக்க முழுக்க அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஏழு மாடி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் அமைய உள்ள இந்த கட்டிடத்திற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

 

இந்த கட்டிடத்தின் இணைய குற்றங்களை கண்டறிந்து தடுக்கும் வகையில் முதல் இரு தளங்களில் நவீன சைபர் ஆய்வகம் அமைகிறது. அதற்கு மேல் உள்ள தலங்களில் சென்னையின் ஒட்டுமொத்த போக்குவரத்தையும் நேரடியாக கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை அமைய உள்ளது.

 

ஏஎன்பிஆர் எனும் தானியங்கி கேமராக்கள் மூலம் இனி விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கான தானியங்கி முறையில் கணினி வழியாக அபராத ரசீது செல்லும் வழியில் தொழில் நுட்பம் இங்கு ஏற்படுத்தப்படுவது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

ஏழாவது தளத்தில் தான் மேலைநாடுகளில் உள்ளதுபோல் நகரம் முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நவீன கேமராக்கள் அமைப்பதற்கான டெண்டர் விடும் பணிகளும் நடந்து வருகிறது.

 

தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கட்டுப்பாட்டு அறை இருக்கும் என காவல்துறை உயர் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon