நீட் தேர்வு முடிவுகளில் எந்த வித குளறுபடியும் நடைபெறவில்லை..!
நீட் தேர்வு முடிவுகளில் எந்த வித குளறுபடியும் நடைபெறவில்லை என்று தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் கடந்த 16ஆம் தேதி வெளியானது.
இது தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகவும் ஓஎம்ஆர் தாள்கள் மாற்றப்பட்டதாகவும் பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் குவிந்தன.
இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் நீட் தேர்வு என்பது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி முறையாக நடைபெற்றிருப்பதாகவும் நீண்ட ஆய்வுக்குப் பிறகுமுடிவுகள் வெளியிடப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டதாக சமூகவலைதளங்களில் கூறப்படும் புகார்களில் நம்பகத்தன்மை இல்லை என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட் விடைத்தாள்கள் தொடர்பாக இணையதளத்தில் வெளியான ஓஎம்ஆர் தாள்கள் போலியானவை என்றும் குளறுபடியான வதந்தி பரப்பியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







