--- --:--:-- --

சிசிடிவி கேமராக்களை பொருத்தி அசத்திய இளைஞர்கள்..!

3

ராமநாதபுரம் அருகே உள்ள கொம்பூதி கிராமத்தை சுற்றிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி அந்த ஊர் இளைஞர்கள் கண்காணித்து வருகின்றனர்.

 

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரும் கொம்பூதி கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உண்டியல் காணாமல் போனது. இதனையடுத்து அவர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி ஊர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர்.

 

சிசிடிவி கேமரா தங்களது பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிப்பதாகக் கூறும் ஒவ்வொரு பெண்களும் இரவு நேரத்திலும் பயமின்றி வெளியே சென்று வர முடிவதாக கூறுகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon