பைக்குக்குள் புகுந்த விஷப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர்..!
சென்னையில் மாற்றுத்திறனாளியின் பைக்குக்குள் புகுந்த விஷப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர். பெரம்பூரை சேர்ந்த மாற்று திறனாளியான ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தின் நுழைவு வாயில் அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
மீண்டும் வாகனத்தை எடுக்க வந்தபோது பாம்பு தலையை நீட்டி கொண்டு இருந்ததை கண்டு தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அடிப்பகுதியில் இந்த விஷப் பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப் பையில் பிடித்து கொண்டு சென்றனர்.






