சாலை விபத்தில் துண்டான கை விரலை சாலையில் தேடிய பயணி..!
நாகை அருகே சாலை விதியை மீறி ராங் சைடில் வந்த லாரியின் பின்பக்கத்தில் இடித்த ஷேர் ஆட்டோவால் தனது இரண்டு விரல்களை இழந்த பயணி ஒருவர் அவற்றை சாலையில் தேடிய பரிதாபம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
நாகூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது விதியை மீறி வெளிவந்த ஷேர் ஆட்டோ லாரியின் பின் பக்க வாட்டிலும் பின்னர் இரு சக்கர வாகனங்களிலும் மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணித்த நபர் ஒருவரின் இரண்டு கைவிரல்கள் துண்டாகி கீழே விழுந்தன.
அவற்றை அந்த பயணி தேடிய பரிதாபம் அரங்கேறியுள்ளது. இரண்டு விரல்கள் தேடி கண்டுபிடிக்கப்பட்டு அவர் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.






