--- --:--:-- --

மருத்துவப் படிப்புக்கான “நீட்” நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது

gd

ருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை தேர்வு எழுதிய மாணவர்கள் இணைய தளத்தில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மாதம் 13-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு 3 ஆயிரத்து 862 மையங்களில் நடத்தப்பட்டது. 15 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 13 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வை எழுதியிருந்தனர்.

 

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்த மாணவர்கள் தேர்வு எழுத முடியவில்லை. இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விடுபட்ட மாணவர்களுக்கு நேற்று முன்தினம் தேர்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 1.4 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

 

தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை இன்று மாலை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை nta.ac.in மற்றும் ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon