மாஸ்டர் படத்திலிருந்து Quit பண்ணுடா என்ற பாடல் இன்று வெளியாகிறது..!
இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளையொட்டி மாஸ்டர் படத்திலிருந்து Quit பண்ணுடா என்ற பாடல் இன்று வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர் பொது முடக்கம் முடிந்து திரை அரங்குகள் திறந்த உடன் மாஸ்டர் படம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு Quit pannuda என்ற பாடல் வீடியோ வை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் உள்ளிட்ட மாஸ்டர் திரைப்பட பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பிரபலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.







