தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடந்து கடலோர ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.
இந்த நிலையில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.






