இந்து – முஸ்லீம் ஒற்றுமையுடன் தனிஷ்க் வெளியிட்ட விளம்பரம் விமர்சனத்திற்கு உள்ளானது எப்படி..?
பிரபல டைட்டான் குழுமத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்து மதத்தை சேர்ந்த இளம் கர்ப்பிணிப் பெண்ணிற்கு முஸ்லிம் மதத்தை சேர்ந்த அவரின் மாமியார் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது போன்ற விளம்பரம் ஒன்றை கடந்த வாரம் தனிஷ்க் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
இது லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால், டிவிட்டரில் பாய்காட் தனிஷ்க் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆனதாலும் விளம்பரத்தை யூடியூபில் இருந்து நீக்கியது.
இந்த நிலையில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை விளக்கும் வகையிலான விளம்பரத்தை நீக்கியதற்காக எம்பி சசிதரூர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.






