--- --:--:-- --

தமிழகத்தில் முதலீடு செய்ய 14 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன..!

2

மிழகத்தில் முதலீடு செய்ய 14 நிறுவனங்களுடன் தொழில் துறை சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலும் பல்வேறு நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.

 

குறிப்பாக கொரொனா காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க தலைமை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முன்னிலையில் பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 7,000 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன .

 

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஜெ‌எஸ்‌டபில்யு குழுமம், அப்பல்லோ டயர்ஸ், பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம், ஐநாக்ஸ் திரவ ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனம் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.

 

தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 30 ஆயிரத்து 664 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் இழுக்கப்பட்டு 67 ஆயிரத்து 612 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப் பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon