நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும்..!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இது சரியான நேரத்தில் வெளியான அறிவிப்பு என்றும் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் எவ்வகையிலும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையாது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மோடி அரசின் மற்றொரு நகைச்சுவையான அறிவிப்பு இது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.







