--- --:--:-- --

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

8

மிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

விசாகப்பட்டினத்தில் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளதாக தெரிவித்து இருக்கும் ஆய்வு மையம் ஆந்திர கடலோரப் பகுதியில் கரையை கடக்கும் எனவும் கூறியுள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கரூர், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வரும் 14ம் தேதி புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon