--- --:--:-- --

தமிழ் மேட்ரிமோனி வாயிலாக 50 சவரன் நகைகள் மோசடி..!

7

திருவண்ணாமலையில் பெண்களிடம் 50 சவரன் நகைகளை மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாநகர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை ஏமாற்றி நகைகளை வாங்கி மோசடி செய்ததாக திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் மீது புகார் அளித்தார்.

 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழ் மேட்ரிமோனி இணையதளம் வாயிலாக பல ஊர்களை சேர்ந்த பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி நகைகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

 

இந்த நகைகளை பிரசாந்த் என்பவர் மூலம் அடமானம் வைத்து பணம் பெற்றதாகவும் தெரிவித்ததையடுத்து அவரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon