--- --:--:-- --

ஆறு மாதத்தில் ஆட்சி மாற்றம்: விஜய்க்கு அனிதா ராதாகிருஷ்ணன் சவால்

5

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் ஞாயிறு இரவு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ”இன்னைக்கு இந்த ஆட்சியாளர்கள் தங்களை எம்ஜிஆரோடு ஒப்பிட்டுப் பேசிக்கிட்டு இருக்காங்க. எந்த வகையில ஒப்பிட முடியும்? புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அண்ணாவிடமும், கலைஞரிடமும் வளர்ந்தவர். சாதாரணமான ஒரு முதலமைச்சர் நீங்க, அவரோடு உங்களை ஒப்பிட முடியுமா?

இன்னைக்கு இருக்கிற அமைச்சர்கள் செயல்பாட்டைப் பார்த்தால் ஏதோ வானத்துல இருந்து குதிச்சவங்க மாதிரி இருக்காங்க. இந்த ஆட்சி எவ்வளவு நாளைக்கு இருக்கும்னு நான் வெளிப்படையாச் சொல்றேன், இன்னும் ஆறே மாதங்கள்… அதற்கு மேல் இந்த ஆட்சி இருக்காது. ஆறு மாசத்துல தலைவர் ஸ்டாலின் அவர்கள் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவார். இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கட்சியை வழிநடத்துவார்” என்று விமர்சித்தார்.

Leave a Reply

Right Menu Icon