--- --:--:-- --

தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் இசைக்கப்படும்: மத்திய அரசுக்கு பதில் அளித்த த.வெ.க

4

ரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்திற்கு முன்பு வந்தே மாதரம் பாடப்படுவதையோ அல்லது இசைக்கப்படுவதையோ அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை உத்தரவிட்ட நிலையில் , அரசு நிகழ்வுகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் தங்களது தற்போதைய நடைமுறையைத் தொடரப்போவதாக தமிழக அரசு சனிக்கிழமை கூறியுள்ளது.

 

 

உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அரவிந்த் காரே, தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், வந்தே மாதரம் முதலில் பாடப்பட வேண்டும் அல்லது இசைக்கப்பட வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அலுவல் நிகழ்வுகளில் இந்த நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

 

சமீபத்தில் மதுரையில், மின்சாரத் துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் பேசியதாவது, “தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்படும். அதில் எந்த சமரசமும் இருக்காது” என்றார். அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்திய அவர், மேற்கு வங்கத்தின் பதவியேற்பு விழாவின்போது அந்மாநிலத்தின் மாநில கீதம் முதலில் இசைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.

 

 

மாநிலங்கள் மீது வந்தே மாதரத்தை மத்திய அரசு திணிக்கக் கூடாது என்று கூறி, மத்திய அரசின் உத்தரவை சி.பி.ஐ மாநில செயலாளர் எம். வீரபாண்டியன் எதிர்த்தார். “ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

 

 

இந்த உத்தரவு, அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதமளிக்கும் மத சுதந்திரத்திற்கு எதிரானது என்று எம்.பி. சு. வெங்கடேசன் கூறினார். இது ஒரு குறிப்பிட்ட மதத்தை நிலைநிறுத்தி, நாட்டை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதற்கான முயற்சி என்று அவர் குற்றம் சாட்டினார்.

 

 

த.வெ.க தலைவர் விஜய், மே 10-ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்ற போது வழக்கத்தில் இருந்த நடைமுறைக்கு மாறாக, முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டு, பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இறுதியாகவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இது தி.மு.க உட்பட த.வெ.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Right Menu Icon