ஒரு மணி நேரத்தில் 30 வகையான உணவுகளை சமைத்து சாதனை படைத்த சிறுமி..!
கேரளாவை சேர்ந்த 10 வயது சிறுமி ஒரு மணி நேரத்தில் 30 வகையான உணவுகளை சமைத்து சாதனை படைத்துள்ளார். எர்ணாகுளத்தை சேர்ந்த விமானப் படையின் வின்கமாண்டர் பிரதீப் பாபுவின் மகள் சனி பிரதீப் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இட்லி, ஊத்தாப்பம், ஃப்ரைட் ரைஸ், காளான் டிக்கா, பன்னீர் டிக்கா, ரோஸ்ட் , அப்பம் உள்ளிட்ட 33 வகை உணவுகளை ஒரே மணி நேரத்தில் சமைத்து ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
இந்த சாதனையை கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி படைக்கப்பட்டாலும் அது தற்போது தான் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பத்து வயதே ஆன சிறுமி யுடியூபிள் சமையல் கலையை கற்று கொடுக்கிறார் என்பது கூடுதல் சிறப்பம்சம்.







