--- --:--:-- --

மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்ட கணவன்..!

13

துரையில் திருமணம் ஆன 20 நாட்களில் பிரிந்து சென்ற மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர். ராஜமுருகன் மதுரை சோழவந்தானை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

 

குடிபோதையில் ராஜமுருகன் சித்ரவதை செய்ததால் திருமணமான 20 நாட்களிலேயே கணவனைப் பிரிந்து அந்த பெண் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் மனைவியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது மட்டுமின்றி பெண் வீட்டாருக்கும் ராஜமுருகன் அனுப்பி வைத்துள்ளார்.

 

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் ராஜமுருகனை சோழவந்தான் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon