உயிரோடு இருக்கும் இளம் பெண்ணுக்கு மர்ம நபர்கள் கண்ணீர் அஞ்சலி..!
பெரம்பலூரில் உயிரோடு இருக்கும் இளம் பெண்ணுக்கு மர்ம நபர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். போஸ்டரில் இருக்கும் ரோசினிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் அவரது கணவர் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனால் தாய் வீட்டில் வசித்து வந்த ரோஷினி இயற்கை எய்தி விட்டதாக கூறி மர்ம நபர்கள் சிலர் பெரம்பலூர் மற்றும் புறநகர் பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். புகாரின் பேரில் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.






