அடுத்தடுத்த 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்து..!
சிலி நாட்டில் அடுத்தடுத்த 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். லாஅரோக்கேணியா என்ற பகுதியில் நேற்று காலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்ற கார் லாரி டிரக்குகளில் என அடுத்தடுத்து வந்த 18 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக மோதி விபத்து ஏற்பட்டது.
தீப்பிடித்த வாகனத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு நிலையில் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.







