--- --:--:-- --

போலி முக கவசங்களை தயாரித்த மூவர் கைது..!

12

திருப்பூரில் ராம்ராஜ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலி முக கவசங்களை தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனமான ராம்ராஜ் நிறுவனம் தயாரிக்கும் முகக் கவசங்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் என முகநூலில் விளம்பரம் வெளியிட்டனர்.

 

சீனுவை தொடர்பு கொண்ட ராம்ராஜ் ஊழியர்கள் அவரிடம் முகக் கவசங்கள் வாங்குவது போல நடித்து அவரது கூட்டாளியான நேர்மை நாதனுக்கு முன்பணம் அளித்தனர். பின்னர் கேவிஆர் நகரில் அமைந்துள்ள கடையில் முகக் கவசங்கள் சென்றபோது ராம்ராஜ் முத்திரையுடன் போலி முககவசங்கள் தயாரிக்கப் பட்டு இருப்பது தெரியவந்தது.

 

இதையடுத்து சீனு, நேர்மை நாதன் மற்றும் அவர்களுக்கு உதவியவர்களை கைது செய்த போலீசார் ஆயிரத்து 500 போலி கவசங்களை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon