--- --:--:-- --

ராஜீவ் காந்தி கொலை வழக்‌கு : 30 நாள்கள் பரோலில் சொந்த ஊர் சென்ற பேரறிவாளன்

11.1

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் 30 நாட்கள் பரோலில் வீட்டுக்கு சென்றார். கடந்த 29 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு அவரது தாயார் அற்புதம்மாள் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

அந்த வழக்கில் பேரறிவாளனுக்கு பரோல் விடுப்பு கிடையாது என சிறைத்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால் சிறை துறை மற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி கிருபாகரன் வேல்முருகன் அமர்வு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் விடுப்பு வழங்க உத்தரவிட்டது.

 

அதன்படி இன்று காலை சென்னையில் உள்ள புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

 

கொரொனா தொற்று காரணமாக பேரறிவாளனை காண வெளியாட்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon