பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி வெளியிட்ட வீடியோ…!
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி ஒருவர் தனது கணவர் குடும்பத்தை போலீசார் மிரட்டுவதாக குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
நெய்யுர் பகுதியை சேர்ந்த சஜி என்பவர் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த இளைஞரை வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தாங்கள் இருவரும் சரண் அடைந்தால் மட்டுமே கணவர் குடும்பத்தை விடுவோம் என்று போலீசார் மிரட்டி வருவதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.






