நாகலாந்து மாநில முன்னாள் ஆளுநரும் , சிபிஐ முன்னாள் இயக்குனருமான அஸ்வினி குமார் தற்கொலை..!
சிபிஐ முன்னாள் இயக்குநரும், நாகலாந்து மாநில முன்னாள் ஆளுநரும் ஆன அஸ்வனி குமார் தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் வசித்து வந்த அஸ்வனி குமார் தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அஸ்வனி குமார் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை இமாச்சல பிரதேச மாநில டிஜிபி ஆகவும், அதன்பின் 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரை சிபிஐ இயக்குனராகவும் பணியாற்றி வந்தவர். நாகலாந்து மாநில ஆளுநர் ஆகவும் அஸ்வனி குமார் சிலகாலம் பொறுப்பு வகித்து வந்தார்.
உயர் பொறுப்புகளில் இருந்த அஸ்வனி குமார் திடீரென தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் விரிவாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







