அடாவடியாக பேசி பணம் வசூல் செய்யும் காவல் உதவி ஆய்வாளர்..!
திருப்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் அடாவடியாக பேசி அபராதம் விதிப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரியும் அதியமான் புதிய பேருந்து நிலையம் பகுதி வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவரை மடக்கிப் பிடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் ஆட்டோவில் இருந்தபடியே அடாவடியாக பேசி அபராதம் விதித்ததாகச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே காவல் ரோந்து வாகனத்தில் அதியமான் கைத்துப்பாக்கியை காட்டிய படி வலம் வந்தது தொடர்பான புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.







