--- --:--:-- --

மனித முகத்தை கொண்ட ஆந்தை மின்கம்பியில் அடிபட்டு சிக்கியது..!

8

செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்கம்பியில் அடிபட்டு பறக்க முடியாமல் தவித்த மனித முகம் கொண்ட ஆந்தையை மக்கள் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனர். செங்கல்பட்டு அருகே காட்டுப்பகுதியில் மின்கம்பியில் அடிபட்ட வெள்ளை நிற ஆந்தை ஒன்று பறக்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது.

 

அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். மனிதர்களையும் அந்த ஆண்டை வித்தியாசமாக தன் கண்களை உருட்டி உருட்டி பார்த்தது. அதோடு மனிதர்களைக் கண்டு பயந்து ஓடாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது.

 

பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் வித்தியாசமாகத் தெரிந்த ஆந்தையை பையில் போட்டு பத்திரமாக மீட்க முயன்றனர். பார்க்க வெள்ளையாக இருந்ததால் வெளிநாட்டு ஆந்தை என்று சிலர் பேசிக்கொண்டனர். உலகம் முழுக்க பரவலாக காணப்படும் இந்த ஆந்தை மனிதர் முகம் போல முகத்தை கொண்டது.

 

இரவு நேரங்களில் எலிகளை அடித்து உணவாக உட்கொள்ளும். அமைதியான வாழ்க்கை முறையில் வாழும் இந்த ரக ஆந்தைகள் இறக்கைகள் இரண்டடி நீளம் கூட வளரக் கூடியவை.

 

இஸ்ரேல் போன்ற நாடுகளில் ஆந்தைகளை வளர்க்க அரசாங்கமே விவசாயிகளை ஊக்கப் படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டில் பிடிபட்ட ஆந்தையை பொதுமக்கள் பத்திரமான பகுதிக்கு கொண்டு சென்று விட்டன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon