--- --:--:-- --

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்ட வாய்ப்பு..!

9.1

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக 100 அடியை எட்ட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98.51 அடியாகவும், நீர் இருப்பு 62.92 டிஎம்சி ஆக உள்ளது.

 

அணைக்கு நீர்வரத்து 12,903 கன அடியிலிருந்து 11,318 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 850 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon