அதிமுக எம்எல்ஏ காதல் திருமண விவகாரம் குறித்து நாளை விசாரணை..!
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு தனது மகளை கடத்தியதாகவும் அவரை மீட்க கோரி பெண்ணின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சௌந்தர்யா என்பவரை கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது மகளை எம்எல்ஏ பிரபு கடத்தி உள்ளதாகவும் மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி உயர் நீதிமன்றத்தில் பெண்ணின் தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்று நீதிபதிகள் நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்






