அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு..!
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீட்டை பெற்று தருவதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவதில் மாண்புமிகு முதலமைச்சர் உறுதியாக உள்ளார் என்றும், ஒப்புதல் பெறப்படுகிற கால அளவை பொறுத்தே செயல்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.







