--- --:--:-- --

மானாமதுரை அருகே பொதுமக்கள் பாலை கீழே ஊற்றி தங்களது எதிர்ப்பை மாவட்ட நிர்வாகத்திற்கு காட்டினார்கள்.!

1.2

மானாமதுரை அருகே பொதுமக்கள் பாலை கீழே ஊற்றி தங்களது எதிர்ப்பை மாவட்ட நிர்வாகத்திற்கு காட்டினார்கள்.இச்சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் வி. மலம்பட்டி யில் உலகநாதன் மகளிர் சுய உதவி குழு செயல்படுகிறது.இவர்கள் ஆவின் நிர்வாகத்திற்கு பால் சப்ளை செய்து வந்த நிலையில் சில நிர்வாக காரணங்களுக்காக பால் கொள்முதல் செய்ய வில்லை என்று குற்றம் சுமத்தி உலகநாதன் மளிர் சுய உதவி குழுவினர் தங்களது பாலை ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்ய வில்லை என்ற வருத்தத்தில் பாலை கீழே ஊற்றி தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தினார்கள்.

இந்த பிரச்சினை குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி, மீண்டும் ஆவின் நிர்வாகம் தங்கள் குழுவினரின் பாலை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon