போதை பொருளை பயன்படுத்தவில்லை என திட்டவட்டமாக கூறும் நடிகைகள்…!
போதை பொருள் பயன்பாடு புகாருக்கு ஆளாகியுள்ள தீபிகா படுகோனே உள்ளிட்ட நடிகைகள் 4 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். நடிகர் சுஷாந்த்க்கு கஞ்சா வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ரியா ச்சக்கரவர்த்தி மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவலர்கள் நடத்திய விசாரணையில் நடிகை ராகுல் பிரீத் சிங், தீபிகா படுகோன் ஆகியோருக்கும் போதை கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அனுப்பப்பட்ட ஆணையை ஏற்று கடந்த வார இறுதியில் ஆஜரான 4 பேரிடமும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் எந்த சூழலிலும் போதைப்பொருள் பயன்படுத்தியது இல்லை என்று தீபிகா உள்ளிட்ட நான்கு நடிகைகளும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சிகரெட் புகைக்கும் பழக்கம் கூட தங்களிடம் இல்லை என்று அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளனர். நடிகர் சுஷாந்த் போதைப்பொருள் உட்கொண்டாரா என்பதைப் பற்றித் தங்களுக்குத் தெரியாது என்றும் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் கூறியுள்ளனர்.
போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள தயாரிப்பாளர் பிசிசி பிரசாத் இந்த வழக்கில் இயக்குனர் கரண் ஜோகர் தொடர்பு படுத்தக் கோரி துன்புறுத்தப்படுவதாக நீதிபதியிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






