--- --:--:-- --

“சமூக இடைவெளியுடன் அதிமுக செயற்குழு களைகட்டியது” கொரோனா “நெகட்டிவ்” சர்டிபிகேட் இருந்தால் மட்டுமே அனுமதி!!

-ops-eps-panneerselvam-palaniswami-pti

திமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் களை கட்டியது.

 

சமூக இடைவெளியுடன் 3 தளங்களில் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில் அழைப்பிதழுடன் கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், கூட்டத்தில் பொதுச் செயலாளர் பதவி, முதல்வர் வேட்பாளர், 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைப்பது, சசிகலா விவகாரம் போன்றவை குறித்து சூடான விவாதங்கள் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

 

அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 300 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருந்தது. இவர்கள் அனைவருக்கும் கடந்த 3 நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. 

 

இந்த பரிசோதனை முடிவில் கொரோனா நெகட்டிவ் என்ற சர்டிபிகேட் உள்ளவர்கள் மட்டுமே செயற்குழுவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முசிறி எம்எல்ஏ செல்வராஜ் உள்ளிட்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர்கள் செயற்குழுவில் பங்கேற்கவில்லை. செயற்குழு உறுப்பினர்கள் செல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

 

மேலும் தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் 3 பகுதிகளில் இருக்கை வசதிகள் இடைவெளி விட்டு செய்யப்பட்டு உள்ளன.
முதல் தளத்தில் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, வேறு இரு இடங்களில் அமர்ந்திருக்கும் செயற்குழு உறுப்பினர்கள் காணும் வகையில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

 

 


அதிமுகவில் முதல்வர் வேட்பாளர், பொதுச் செயலாளர் பதவி, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைப்பது உள்ளிட்ட பிரச்னைகளில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இடையே பனிப்போர் உச்சத்தில் உள்ள நிலையில் இன்றைய செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் தமிழக அரசியல் நிலவரம், வரவிருக்கும் சட்டப்பேரவை த்தேர்தல், கட்சி வளர்ச்சிப்பணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும், அடுத்ததாக பொதுக்குழு கூடும் தேதி பற்றியும் இன்று முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது. பரபரப்பான சூழலில் கூடியுள்ள அதிமுக செயற்குழு கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்பதை அக்கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி பிற கட்சிகள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

Leave a Reply

Right Menu Icon