தாய்க்காக மகனும், மகனுக்காக தாயும் உயிரைவிட்ட சம்பவம்..!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செங்கோடு அருகே மயங்கி கிடந்த தாய் இறந்து விட்டதாக நினைத்து மகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் மகனின் இறப்பை தாளாமல் தாயும் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. வயதான முனியப்பன், கங்காதேவி தம்பதியினர் மகன், மருமகள், பேத்தியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
வயலிலிருந்து உடல்நிலை சரியில்லாததால் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வீட்டிற்கு வந்த மணிகண்டன் அவர் மயங்கி கிடந்ததை அறியாமல் இறந்து விட்டதாக எண்ணி பதட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் மயக்கம் தெளிந்து மகன் இறந்த செய்தியை கணவர் மூலம் அறிந்த தாய் அதிர்ச்சியில் உயிரிழந்தார். தந்தை இறந்தது கூட தெரியாமல் மணிகண்டனின் 2 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்த காட்சிகள் கண் கலங்க வைத்தன.







