ஆண்டுதோறும் இந்தியாவில் 5 லட்சம் விபத்துக்கள்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
இந்தியா முழுவதும் கடந்த ஆண்டில் ஏற்பட்ட 4.49 லட்சம் சாலை விபத்துகளில் 71 சதவீத விபத்துகள் அதிகம் காரணமாக ஏற்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வி. கே .சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு கிடைத்துள்ள தகவலின்படி கடந்த 2019 ஆம் ஆண்டில் 4,49,002 விபத்துக்கள் நடந்துள்ளன. அதில் 3,19,028 விபத்துக்கள் அதிவேகத்தில் ஏற்பட்டவை மொத்த விபத்தில் அது 71.1 சதவிகிதம் என எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் குறிப்பிட்டார்.
சாலை விபத்துக்கள் தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் மத்திய அமைச்சர் வி.கே.சிங் சுட்டிக்காட்டினார். ஆண்டுதோறும் இந்தியாவில் 5 லட்சம் விபத்துக்கள் ஏற்படுகின்றன. உலக அளவில் இது மிக அதிகம் இந்த விபத்துக்களில் 1.5 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். 3 லட்சம் பேர் படுகாயம் அடைகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.







