கிணற்றில் விழுந்து உயிரிழந்த மகளின் சடலத்தை தோளில் 2 கி.மீ. தூரம் சுமந்து சென்ற தந்தை..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கிணற்றில் விழுந்து உயிரிழந்த தனது மகளின் சடலத்தை இரண்டு கிலோமீட்டர் தூரம் தந்தையை தோளில் சுமந்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சேதரபட்டு கிராமத்தை சேர்ந்த தனியார் பேருந்து ஊழியர் ரகுவின் ஐந்து வயது மகள் கிருபா ஸ்ரீ விளையாடியபோது விவசாய கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் செல்ல தகவல் கொடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் சிறுமியின் உடலில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் தந்தையே நடந்து தோளில் சுமந்து கொண்டு வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அந்த காட்சி நெஞ்சை உலுக்குவது போல இருந்தது.






