சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை..!
சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை பத்து நாட்கள் தொடர் தேடுதல் வேட்டைக்கு பின்பு பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளி பப்லு சென்னை ராயபுரம் ரயில் நிலையம் அருகே குடிசைப் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
கடந்த 5 ஆம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சுனில் என்பவரை பார்த்துள்ளார். வேலை வாங்கித் தருமாறு சுனில் கூறியதாகவும் அவரை பப்லு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
மறுநாள் பப்லுவின் 3 வயது மகள் அர்ச்சனாவைப் அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்று திரும்பவில்லை சுனிலை கண்டுபிடிக்கவும், குழந்தையை மீட்கவும் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பத்து நாட்களுக்குப் பின் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.






