வலியால் துடிப்பது போல நடித்து பெற்றோரை ஏமாற்றும் குழந்தையின் வீடியோ வைரல்..!
வலியால் துடிப்பது போல நடித்து பெற்றோரை ஏமாற்றிய குழந்தையின் காட்சிகள் இணையத்தில் பரபரப்பாய் பார்க்கப்படுகின்றன. 16 வினாடி காட்சிகளில் ஒரு சின்னஞ்சிறு மழலையின் கை சிக்கிக் கொண்டது போல முகம் முழுவதும் வலியுடன் நிற்கிறது. இதை கண்டதும் அதன் தந்தை பிஞ்சு மகளின் பூங்கரத்தை மெதுவாக எடுத்து விட வருகிறார்.
ஆனால் அவர் கையை தொட்டதும் அந்த பிஞ்சு குழந்தை சிரித்துக்கொண்டே கையை எடுக்கிறது. பின்னர் மீண்டும் கையை கொண்டு மாட்டி கொண்டது போல நடித்து பின் கையை எடுத்து ஏமாற்றி விட்டேன் என்பது போல ஒரு சிரிப்பையும் சிந்துகிறது. இணையத்தில் பதிவிட்ட இந்த காட்சிகள் ஒரு மணி நேரத்தில் 18 ஆயிரம் முறை பார்க்கப்பட்டுள்ளது.






