--- --:--:-- --

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 63 வது நினைவு தினமான இன்று பல்வேறு கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்..!

0.3

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூரில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் வேதநாயகம் (பள்ளி ஆசிரியர்) ஞானசுந்தரி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் இமானுவேல் சேகரன்.இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 63 வது நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

 

மேலும் அ தி மு க சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் RB.உதயகுமார் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட கழக செயலாளர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் M.A.முனியசாமி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் N.சதன்பிரபாகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், கழக சிறுபான்மைப் பிரிவு செயலாளர் A.அன்வர் ராஜா, கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் KC.ஆணிமுத்து, அ ம மு க சார்பில் கழக தலைமை நிலைய செயலாளர் KK. உமாதேவன் Ex.MLA, கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் S.மாரியப்பன் கென்னடி Ex.MLA,  எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் K. டேவிட் அண்ணாதுரை,  கழக அமைப்புச் செயலாளர் வ து நடராஜன் Ex.MLA, கழக அமைப்புச் செயலாளர் தங்கதுரை Ex.MLA,
கழக மருத்துவ அணி தலைவர் Dr.முத்தையா,  மாவட்ட கழக செயலாளர் வ து ந ஆனந்த்.

தி மு க சார்பில் மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம்,ex, மாவட்ட செயலாளர் சு ப திவாகரன், மற்றும் பவானி ராஜேந்திரன் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நவாஸ் கனி எம் பி உடனிருந்தனர்.
மேலும் பல்வேறு கட்சிகள் சார்பில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Right Menu Icon