--- --:--:-- --

கோவையில் நடைபெற்ற இமானுவேல் சேகரனார் குரு பூஜை விழா. அ.தி.மு.க., தி.மு.க.,காங்கிரஸ், பா.ஜ.க உட்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி !!!

0.1

ந்திய சுதந்திர போராட்ட களத்தில் வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர் தியாகி இம்மானுவேல் சேகரன். இவரது 63 ஆம் ஆண்டு குரு பூஜை விழா கோவையில் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக புலிய குளம் பகுதியில் நடைபெற்றது.

 

பேரவையின் தலைவர் மனு நீதி சோழன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அ.தி.மு.க., தி.மு.க.,பா.ஜ.க,காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த இம்மானுவேல் சேகரனார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன், அ.தி.மு.க சார்பாக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன்,காங்கிரஸ் கட்சி சார்பாக செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார்,பா.ஜ.க சார்பாக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.இதில் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையை சேர்ந்த சதீஷ், பாபு, மகேஷ், ராஜேந்திரன், ஜெயகுமார், வினோத், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon