--- --:--:-- --

திருவாடானையில் ஊரக புத்தக திட்டம் சார்பில் விவசாய குழுக்களுக்கு மானியமாக ஒன்றரை லட்சம் வழங்கப்பட்டது..!

1.5

திருவாடானை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர் அதில் ஒவ்வொரு குழுவிற்கும் கடந்த காலங்களில் விவசாயத் துறை சார்பில் 4 டிராக்டர்கள் வழங்கப்பட்டது. அதை வைத்து விவசாயிகள் விவசாயிகள் நிலங்களை உழுது பயன்பெறலாம்.

 

அந்த வகையில் இன்று திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின்படி வட்டார ஊடக செயலாக்க அழகு சார்பில் ரூபாய் 1.5 லட்சத்துக்கான காசோலையை விவசாயிகளிடம் வழங்கினார்கள்.

இந்த தொகையின் மூலம் விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள் வாங்கிக்கொள்ளலாம் அதைவைத்து பொதுவில் பயன்படுத்தி விவசாயத்தை பெருக்கலாம் என்பதை நோக்கம் என்றும் தெரிவித்தனர்.

 

இந்த நிகழ்வில் விவசாயத்துறை திட்ட உதவி திட்ட இயக்குனர் கருப்பையா மற்றும் ஊரக புத்தாக்க திட்ட செயல் அலுவலர் மார்ட்டின் விண்ணரசு மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon