--- --:--:-- --

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கப்போகும் நடிகர் அஜீத்..!

4

டிகர் அஜித் அடுத்தது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிசுற்று, சூரரைப்போற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா நடிகர் அஜித்தை சந்தித்து புதிய கதை ஒன்றை கூறியுள்ளார்.

 

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுதா துரோகி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். ஆனால் அந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் அவரின் இரண்டாவது படமான இறுதிசுற்று பெரும் வெற்றியடைந்தது.

 

இதனால் நடிகர் சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த படம் அடுத்த மாதம் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், கடந்த வாரம் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து புதிய கதை ஒன்றை கூறியுள்ளார்.

 

அந்த கதை அஜித்திற்கு மிகவும் பிடித்திருப்பதாகவு,ம் வலிமை படம் சூட்டிங் முடிந்த பிறகு சுதா படத்தில் நடிக்க அஜீத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon