--- --:--:-- --

காதல் மனைவி பெற்றோருடன் சென்றதால் கணவர் தற்கொலை..!

3

கோவை அருகே திருமணமாகி மூன்றே நாளில் காதல் மனைவி பெற்றோருடன் சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கோவிந்தராஜன், மஞ்சுளா ஜோடி பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

 

ஏழாம் தேதி பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து மஞ்சுளாவை அவரது பெற்றோர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கோவிந்தராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

பெண்ணின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கோவிந்தராஜன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Right Menu Icon