--- --:--:-- --

சென்னையில் காப்பீட்டு நிறுவன உதவி மேலாளர் மன அழுத்தம் காரணமாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!

9

சென்னையில் மேலாளர் கொடுத்த அழுத்தமே காரணம் என வீடியோ வெளியிட்டு காப்பீட்டு நிறுவன உதவி மேலாளர் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏழுகிணறு பகுதியை சேர்ந்த பிரபாகரன் அண்ணா சாலையில் ராயலா டவரில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

 

நேற்று வழக்கம்போல் அலுவலகத்திற்கு வந்த பிரபாகரன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் திடீரென்று எட்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

 

அலுவலக மேலாளர் கொடுத்த பணி ரீதியான நெருக்கடிகள் தனது இந்த முடிவுக்கு காரணம் எனவும் அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் தனது செல்போனில் பிரபாகரன் வீடியோ பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

 

மேலாளரால் எந்த மாதிரியான அழுத்தம் கொடுக்கப்பட்டது, வேறு ஏதேனும் தனிப்பட்ட பிரச்சினை இருக்கிறதா என சிந்தாதிரிப்பேட்டை காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon