--- --:--:-- --

கோவை பீளமேடு பகுதியில் ஊறுகாய்க்காக சக நண்பனின் உயிரை பறித்த வட மாநில இளைஞர் !!!

7.1

கோவை பீளமேடு பகுதியில் தனியார் நிறுவனங்களில் பனியாற்றி வருகின்ற நான்கு இளைஞர்கள் ஒரு அறையில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் உணவு சாப்பிட வீட்டுக்கு சென்றனர். முதலில் இருவர் முதலில் உணவு உட்கொண்டுவிட்டு சென்றுள்ளனர். பின்னர்,17 வயதான சித்து குமாரும் , 20 வயதான பிரஜங்கி குமாரும் உணவருந்த சென்றுள்ளனர்.

 

இந்த நிலையில் அப்போது குழம்பு தீர்ந்ததால் சித்து தனது அறை தோழனிடம் ஊறுகாய் கேட்டுள்ளார். ஆனால்,ஊறுகாய் தர மறுத்த பிரஜங்கி குமார் ஊறுகாயை ஒளித்து வைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி சித்து குமாரை கழுத்தை நெறித்தும், எட்டி உதைத்தும் உள்ளார்.இதனால் மயக்கமடைந்த சித்துகுமார் உயிரிழந்துவிட்டார். மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோது மருத்துவர்கள் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

 

இது தொடர்பாக பீளமேடு போலீஸார் பிரஜங்கி குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஊறுகாய்க்காக தன் அறை சக நண்பரை கொன்ற வட மாநில இளைஞரால் பரபரப்பு. இருவரும் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் இறந்த சித்துகுமார் மற்றும் கொலை செய்த பிரஜங்கி குமாரின் புகைப்படம் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பீளமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon