2 கோடி ரூபாய் கொடுத்து காப்பு காடுகளை தத்தெடுத்துள்ள நடிகர் பிரபாஸ்..!
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் 2 கோடி ரூபாய் கொடுத்து காப்பு காடுகளை தத்தெடுத்துள்ளார். பாகுபலி மூலம் உலகப் புகழ் பெற்றவர் நடிகர் பிரபாஸ். இவர் ஹைதராபாத் அருகே ஆயிரத்து 560 ஏக்கர் பரப்பளவில் உள்ள காசி பள்ளி காப்புக்காடுகளை தத்து எடுப்பதாக அறிவித்தார் .
இதற்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை தெலுங்கானா வனத்துறை அமைச்சர் அல்லோளா இந்திர கரன் ரெட்டி, மாநிலங்களவை எம்பி சந்தோஷ் குமார் ஆகியோரிடம் வழங்கினார். சந்தோஷ் குமார் எம்பியின் பசுமை இந்தியா சவாலை ஏற்று வனப்பகுதியை தத்தெடுத்ததாக பிரபாஸ் தெரிவித்துள்ளார்.







