பிரபாஸ் தனது ஜிம் பயிற்சியாளருக்கு 73 லட்சம் மதிப்புள்ள காரை பரிசளித்துள்ளார்..!
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் தனது ஜிம் பயிற்சியாளருக்கு 73 லட்சம் ரூபாய் விலை கொண்ட சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார். பாகுபலி படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற பிரபாஸின் உதவியாளராக லக்ஷ்மன் ரெட்டி என்பவர் இருக்கிறார்.
2010 ஆம் ஆண்டு உலக அளவிலான பாடி பில்டிங் போட்டியில் லக்ஷ்மன் ரெடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். அவரை மகிழ்விக்கும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரெஞ்ச்ரோவர் காரை பிரபாஸ் பரிசளித்துள்ளார்.
காரின் முன்பு பிரபாஸ் குடும்பத்தினருடன் லட்சுமி ரெட்டி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 177 பிஎச்பி பவர் கொண்ட ரேஞ்ச் ரோவர் கார் 7 நொடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டது.







