--- --:--:-- --

வரும் 14ஆம் தேதி ஜப்பானில் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தல்..!

7

ப்பான் நாட்டின் அடுத்த பிரதமராக தற்போதைய தலைமை அமைச்சரவை செயலாளர் யோசி ஹைசுகா நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் நீண்ட காலமாக பிரதமர் பதவி வகித்து வந்த ஷின்சோ அபே உடல்நல பாதிப்பு காரணமாக சமீபத்தில் பதவி விலகுவதாக அறிவித்தார்.

 

புதிய பிரதமர் அறிவிக்கப்படும் வரை பிரதமராக ஷின்சோ அபே செயல்பட்டு வருகிறார். ஜப்பானின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பை ஆளும் ஜனநாயக கட்சி வரும் 14ஆம் தேதி நடத்த உள்ளது. இந்த நிலையில் ஜப்பான் இலங்கை அமைச்சரவை செயலாளரும், பிரதமர் அபியின் ஆதரவாளருமான யோசி ஹைசுகா புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது.

 

ஜப்பான் பிரதமர் வேட்பாளருக்கான தேர்வு பட்டியலில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பமியோ கிஸ்டா, முன்னாள் ராணுவ அமைச்சர் ஆகியோரும் இருக்கின்றனர்.

 

இருப்பினும் வாக்கெடுப்பில் பங்கேற்க இருக்கும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆதரவு அவருக்கே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவர் ஜப்பான் பிரதமராக தேர்வு செய்யப்படும் வாய்ப்புகள் அதிகமாகின்றன.

Leave a Reply

Right Menu Icon