--- --:--:-- --

இந்தியாவிற்கு கச்சா ண்ணெய் ஏற்றி வந்த கப்பலில் பயங்கர தீ விபத்து…!

4

குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு கச்சா ண்ணெய் ஏற்றி வந்த இந்தியன் ஆயில் நிறுவன கப்பல் தீப்பிடித்து உள்ள நிலையில் அதை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இலங்கையின் கிழக்கு கடலோரப் பகுதியில் இந்த கப்பல் எரிந்து கொண்டிருக்கும் நிலையில் இதில் தீயை அணைக்கும் பணியை கடற்படை கப்பல்கள் 2, விமானங்கள் மேற்கொண்டுள்ளனர்.

 

இதுதவிர சமுத்திரம் ஆகிய இந்தியாவின் மூன்று கடலோர காவல்படை கப்பல்களும், டார்னியர் ரக விமானம் ஒன்று தீயை அணைக்கும் பணிக்காக அங்கு விரைந்துள்ளன. எம்டி நியூ டைமன் என்ற பெயர் கொண்ட இந்த கப்பல் குவைத்திலிருந்து ஒடிஷா மாநிலம் பாரதி பின் உள்ள சுத்திகரிப்பு ஆலைக்கு இரண்டு லட்சத்தி 70 ஆயிரம் டன் கச்சா எண்ணையுடன் வந்து கொண்டிருந்தது.

 

இதற்கிடையில் கப்பலில் உள்ள கச்சா எண்ணெய் கசிந்து கடலில் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை கடல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon